அவிநாசியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கோவை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை  சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்  நேற்று (26.12.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேரவை தலைவர்

             சட்டப்பேரவைத் தலைவர்  அவிநாசியில்  ஆண்,பெண் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக மறைந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் கடந்த சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கை வைத்திருந்தார். அவர்களின் வேண்டுகோலை ஏற்று மறைந்த  அம்மா  திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதிய அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துருவை ஆய்வு செய்த அரசு அதனை ஏற்று திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதியதாக ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) பயிலும் கல்லூரியை 1) இளங்கலை ஆங்கிலம்), 2) இளங்கலை பொருளாதாரம் மற்றும், 3) வணிகவியல் ஆகிய 3 பாடப்பிரிவுகளுடன் துவங்குவதற்கு நிர்வாக அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

          இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) கல்லூரிக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாள்கள் மூலதன செலவினம் தொடர் செலவினம் மற்றும் தொடரா செலவினம் ஒப்பளிப்பு குறித்த ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

                இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் துணை கலெக்டர் ஷ்ரவன்குமார் . உயர்கல்வித்துறை மண்டல இயக்குநர் பரமேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: