முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலம் வட்டாரத்தில் 2 இடங்களில் மூளைக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி.

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

நீடாமங்கலம் வட்டார வளமையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நீடாமங்கலம் காரக்கோட்டை ஆகிய பள்ளிகளில் 2நாள் மூளைக்காய்ச்சல் பற்றிய முதல்கட்ட விழிப்புணர்வு பயிற்சியை நீடாமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.இரண்டாம் கட்ட பயிற்சியை காரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசன் தொடங்கி வைத்தார்.பயிற்சியை நீடாமங்கலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சம்பத்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவர்கள் பூவரசன், நித்தியவதணன், ,அருள்வாருணி கலந்து கொண்டு மூலைக்காய்ச்சல் நோய் பரவும் விதங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பயிற்சியில் ஆசிரியர்கள்,மாற்று திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள்,சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 105பேர் கலந்து கொண்டனர்.வட்டார ஒருங்கிணைப்பாளர் நவி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்