முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்புமுகாம் மூலம் ஒரே நாளில் 1546 பயனாளிகளுக்கு உடனடி சான்று நீலகிரி கலெக்டர் சங்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் மூலம் ஒரே நாளில் 1546 பயனாளிகளுக்கு உடனடியாக அனுபோக சான்று வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

                                சிறப்பு  முகாம்

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக நில அனுபோக சான்று பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அனுபோக சான்று வழங்கும் சிறப்பு முகாம் கடந்த 29_ந் தேதியன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்றது.

இதில் ஊட்டி வட்டத்தில் வரப்பெற்ற 572 மனுக்களுக்கும் சான்று அன்றே வழங்ப்பட்டது. குந்தா வட்டத்தில் 450 மனுக்கள் வரப்பெற்று 250 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்று வழங்கப்பட்டது. பந்தலூர் வட்டத்தில் 133 மனுக்கள் பெறப்பட்டு 126 மனுக்கள் ஏற்கப்பட்டு சான்று வழங்கப்பட்டது. 17 மனுக்கள நிகாகரிக்கப்பட்டது. கூடலூர் வட்டத்தில் பெறப்பட்ட 13 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குன்னூர் வட்டத்தில் 232 மனுக்கள் பெறப்பட்டு 206 மனுக்களுக்கு சான்று வழங்கப்பட்டு 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கோத்தகிரி வட்டத்தில் பெறப்பட்ட 584 மனுக்களில் 379 மனுக்களுக்கு சான்றிகள் வழங்கப்பட்டன. 205 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

                                   1546 பயனாளிகள்

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1984 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 1546 பயனாளிகள் உடனடியாக சான்று

பெற்று பயனடைந்துள்ளனர். 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 450 மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில சான்று வழங்கப்படும்.

இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி சான்றுபெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்