முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருணாச்சலபிரதேச முதல்வர் பீமா காண்டு சஸ்பெண்ட்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

இடநகர்,  - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முதல்வர் பீமா காண்டு துணை சவுனா மெய்ன், மற்றும் இதர  5 எம்.எல்.ஏக்களை  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அருணாச்சல பிரதேச மக்கள்  கட்சி அறிவித்தது. புதிய முதல்வராக தகம் பாரியோ தேர்வு செய்யப்படுவார் என  அந்த கட்சி அறிவித்தது. ஆனால், நானே முதல்வராக நீடிப்பேன் . எனது அரசுக்கு 49 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என பீமா காண்டு தெரிவித்தார். அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஈடுபட்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி அவரையும் , துணை முதல்வர் சவுனா மெய்னையும் இதர  5எம்.எல்.ஏக்களையும் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில்  பீமா கண்டு அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிப்போம் வேறு யாரும் முதல்வராக ஆதரவு அளிக்க மாட்டோம் என பா.ஜ.க திட்டவட்டமாக தெரிவித்தது.ஆளும் தற்போது ஆளும் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி  புதிய முதல்வராக தகம் பாரியோவை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர்   அவரது தேர்வு பற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அதில் இருந்த முன்னணி தலைவர்  பீமா காண்டு மற்றும் பெரும்பான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  கட்சியை விட்டு விலகி அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர். அதன் பின்னர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. அந்த கூட்டணி அரசில் பா.ஜ.க வும் உள்ளது. பீமா காண்டு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பதவியேற்றார். அவர் பதவியேற்ற  ஆறு மாதத்தில் தற்போது ஆளும் கூட்டணி அரசில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பீமா காண்டு , துணை முதல்வர் சவுனா மெய்ன் , மற்றும் இதர  5 எம்.எல்.ஏக்கள்  கட்சி விரோத நடவடிக்கையில் உள்ளனர். அவர்கள் பா-ஜ.கட்சியை சார்ந்தே உள்ளனர் என கட்சி தலைமை குற்றம் சாட்டி  அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் 43 பேர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆவார்கள். 12 பேர் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள். 3 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாகவும் ,ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏவாகவும் உள்ளனர். இந்த மாநிலத்தில பீமா காண்டு கடந்த ஜூலை மாதம் முதல்வராக பதவியேற்றார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல்வராக பதவியேற்றார். அவரும் இதர 42 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அருணாச்சலபிரதேச மக்கள் கட்சியில் சேர்ந்தார்கள். 

 தற்போது ஆட்சியில் உள்ள அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க உள்ளது.இந்த நிலையில் கூட்டாளி கட்சியிடம் எந்த வித ஆலோசனையும் செய்யாமல் அருணாச்சல மக்கள் கட்சி பீமா காண்டுவையும்,துணை முதல்வர்  சவுனா மெய்ன் மற்றும் இதர  5எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. பீமா காண்டு கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால்  அம்மாநிலத்தில்   ஆளும் கட்சியின் சார்பில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார். 

இது குறித்து, அருணாச்சலபிரதேச மக்கள் கட்சியின் தலைவர் காபா பென்கியா கூறுகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக தகம் பாரியோ தேர்வு செய்யப்படுகிறார் என தெரிவித்தார். இருப்பினும், முன்னாள் துணை முதல்வர் காமங் தோலோ தற்போதைய ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தங்கா பயலிங் மற்றும் பாரியோ ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டன. இருப்பினும் கட்சி அனைத்து எம்.எல்.ஏக்களும் பாரியோ பெயரையே முதல்வர் பதவிக்கு ஏகமனதாக அறிவித்துள்ளனர் என்று பென்கியா தெரிவித்தார்.

கடந்த 5 மாதமாக முதல்வர் பதவியில் இருந்த பீமா காண்டு அருணச்சல பிரதேச மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வந்ததே இல்லை. அவர் மேலும்  கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கைய அதிகரிக்கவும் எந்தவித முயற்சியையும் எடுக்க வில்லை என பென்கியா குற்றம் சாட்டினார்.கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பீமா காண்டு கூட்டணி அரசில் உள்ள பா.ஜ.கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளார் என்றும் அவரது கட்சிதரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீமா காண்டு ,துணை முதல்வர் சவுனா மெய்ன் மற்றும், இதர  5எம்.எல்.ஏக்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் சார்பில் தகம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டபோதும், பீமா காண்டு தனது அரசுக்கு  49 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் ,தானே ஆட்சியில் நீடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்