முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் நினைவு நாள்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்,

அம்பேத்கர் இருக்கை துவக்கவிழா மற்றும் அண்ணல் அம்பேத்கர்             61-வது நினைவுநாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.   N. பஞ்சநதம், பேராசிரியர், மேலாண்மைத்துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் வரவேற்புரை வழங்கினார். இந்த விழாவில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு சிறப்பு விருந்தினர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், புல முதல்வரகள், துறைத்தலைவர்கள் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர்.  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  செ. மணியன் குத்துவிளக்கேற்றி அம்பேத்கர் இருக்கையை துவக்கி வைத்தார்.

 புதுவை அரசு உள்ளாட்சித்துறை இயக்குனர் முகமது மன்சூர் சிறப்புரையாற்றினார்.  தனது சிறப்புரையில் அம்பேத்கர் பணமதிப்பிழப்பை ஒவ்வொரு பத்து வருடமும் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதை குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் தனது உரையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்களது மனித உரிமைகளில் உள்ள பிரச்சனைகளில் பிரச்சனைகளை இந்த இருக்கை மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஆராய வேண்டும். இவ்விழாவில் மொழிப்புல முதல்வர் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர்   திருவள்ளுவன் மற்றும் கலைப்புல முதல்வர்   நாகராஜன் வாழத்துரை வழங்கினார்கள். பதிவாளர்(பொ) பேராசிரியர்  ஆறுமுகம் முதன்மை உரையாற்றினார். மேலாண்மைத்துறை  S. சமுத்ரராஜகுமார் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் பல்கலைக்கழக புல முதல்வரகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர்  க. சௌந்திரராஜன் மற்றும்  வீ.ராதிகாராணி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்