வனத் துறை கூண்டுக்குள் சிக்கிய குரங்கு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்கை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். ஈரோடு அருகே நசியனூர் ஆலச்சாம்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ஆண் குரங்கு ஒன்று சுற்றித் திரிந்தது. நடந்து செல்பவர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வந்தது. கிராம மக்கள் விரட்டினாலும் அங்கிருந்து செல்லாமல் அட்டாகசம் செய்து வந்ததையடுத்து, குரங்கை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இரண்டு நாள்களுக்கு முன்பு மாவட்ட வன அலுவலர் கூடுதல் பொறுப்பு அருண்லால் உத்தரவின்பேரில் வனச் சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினர் ஆலச்சாம்பாளையம் கிராமத்தில் கூண்டு வைத்தனர்.  கூண்டில் சிக்காமல் தப்பிவந்த குரங்கு வெள்ளிக்கிழமை காலை கூண்டுக்குள் சிக்கியது. இதையடுத்து, வனத் துறையினர் அந்தக் குரங்கை பர்கூர் வனப் பகுதிக்குள் விட்டனர்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: