முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பியில் சமாஜ்வாதி கட்சி உடைந்தது ,அகிலேஷ் தலைவரனார் - சிவ்பால் - அமர் சிங் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ :  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ் வாதி கட்சி உடைந்தது. அந்த கட்சியின் புதிய தலைவராக முதல்வர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தேசியக் கூட்டத்தில் தற்போது கட்சியின் தலைவராக உள்ள சிவ்பால் யாதவ், அமர் நீக்கம் செய்யப்பட்டார். இந்த செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது என கட்சி நிறுவனர்  ராம் கோபால் யாதவை  கட்சி நிறுவனர் முலாயம் சிங் நீக்கினார்.,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது முலாயம் சிங்கின்  சமாஜ்வாதி கட்சி(எஸ்.பி) ஆட்சியில் உள்ளது. அங்கு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவருக்கும் சித்தப்பாவும் கட்சி தலைவருமான சிவ்பால் யாதவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்தது. இந்த மோதல் வெளிப்படையாகவும் கட்சி கூட்டத்தில் வெடித்தது.

இந்த நிலையில் தனதுமகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவைவும், ராம் கோபால் யாதவையும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்குவதாக முலாயம் சிங் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான  24 மணி நேரத்தில் அவர்களது நீக்கம் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. கட்சி தலைவர் முலாயம் சிங் உத்தரவுப்படி நீக்கம் முடிவு வாபஸ் பெறப்பட்டது என்று சிவ்பால் யாதவ் தெரிவித்தார்.

கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்க முலாயம் சிங் கடுமையான  முயற்சிகளை மேற்கொண்டார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தொண்டர்கள் அனைவரும் கருத்து வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என முலாயம் சிங் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவ் இடையேயான மோதல் முற்றிய நிலையில்  அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களாக உள்ள 50 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் கடும் கோபமடைந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் முலாயம் சிங்கை சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார்.

அவர் முலாயம் சிங்கை சந்தித்த சில மணி நேரத்தில்   சமாஜ் வாதி கட்சியின்  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் தற்போது உள்ள 229 சமாஜ் வாதி எம்.எல்.ஏக்களில் 200 பேர் கலந்து கொண்டு அகிலேஷ் யாதவுக்கு முழு ஆதரவு அளித்தார்கள். இதற்கிடையே சமாஜ் வாதி கட்சியின் தேசியக் கூட்டம்  மாநில தலைநகர் லக்னோவில் நேற்று அதிரடியாக நடைபெற்றது.  இதில் கட்சியின் புதிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். முலாயம் சிங்கிற்கு பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தேசிய கூட்டம் சட்டவிரோதமானது. இந்த கூட்டத்தை  ராம் கோபால் யாதவ் கூட்டியது செல்லாது என்று முலாயம் சிங் கூறினார்.

கட்சியின் கூட்டத்தில்  அமர் சிங்கை நீக்குவது என்றும் தற்போது கட்சியின் தலைவராக உள்ள சிவ்பால் யாதவை அந்த பதவியில் இருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியின்  நிறுவனரான முலாயம் சிங்கை  கட்சியின் புரவலராகவும் அறிவிக்கப்பட்டார். ராம் கோபால் யாதவ் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முலாயம் சிங் எச்சரித்தார்.  இருப்பினும் முலாயம் சிங்குடன் பல ஆண்டுகள் பணியாற்றிய மூத்த தலைவர்களும்  ராம் கோபால் மற்றும் அகிலேஷ் யாதவுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார்கள்.

கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் , தனது தந்தை முலாயம் சிங்கை மிகவும் மதிப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படும் நபர்களுடன் முலாயம் இருப்பதைதான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் மகன் நடவடிக்கையில் மிகவும் அதிருப்தி அடைந்த முலாயம் சிங் அதிரடியாக கட்சியில் இருந்து தனது தம்பியும்,  கட்சி தலைவருமான ராம் கோபால் யாதவை நீக்குவதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்