ஈரோட்டில்ஹெல்மெட் அணிந்த ஓட்டிகளுக்கு இனிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு

சாலை போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு,  இனிப்பு வழங்கப்பட்டது.ஜனவரி, 1 முதல், 7 வரை, சாலை போக்குவரத்து வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட காவல்துறை, போக்குவரத்து பிரிவு சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில், நேற்று நடந்தது. இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரண்டு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு, போக்குவரத்து டி.எஸ்.பிகொடிசெல்வன், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சரவணன் மற்றும் போலீசார் இனிப்பு வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: