திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திருச்சி
pro thanjai

திருச்சி மாவட்டத்தில் நேற்று (02.01.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

உதவி தொகை

 

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

9 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிக்களுக்கான உதவித் தொகையும், 3 நபர்களுக்கு நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு கருவி வாங்க ரூ.15,490க்கான காசோலையும், துறையூர் வட்டம், கீராம்பூர் கிராமத்தை சார்ந்த கணவனை இழந்த அம்சவள்ளி என்பவருக்கு குடும்ப வாழ்வாதாரத்திற்கு தையல் இயந்திரம் வாங்க ரூ.5755க்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 64 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 24 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 61 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 32 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 41 மனுக்களும், புகார் தொடர்பான 18 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 12 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 16 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 09 மனுக்களும் மற்றும 110 இதர மனுக்கள் என மொத்தம் 387 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: