முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிலேஷ் அணியுடன்
காங்கிரஸ் கூட்டணி
 - ராகுல் - பிரியங்காவை சந்திக்கிறார்


சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதிய கூட்டணி

இந்த நிலையில்  முலாயம் கோஷ்டியினரும், அகிலேஷ் கோஷ்டியினரும் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரி  தேர்தல் ஆணையத்தினை அணுகினார்கள். கட்சியில் அதிக பெரும் பான்மை உள்ள அகிலேஷ் அணிக்கே சைக்கிள் சின்னம் என்று  கூறப்பட்ட நிலையில் கட்சி பிளவை சரி செய்ய இரு தரப்பு தலைவர்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதே  நேரத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாத காங்கிரஸ் கட்சி சமாஜ் வாடி கட்சியுடன் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்  இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து  தேர்தலில் போட்டியிட உள்ளன.  இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்.

ராகுலை சந்திக்கிறார்

அகிலேஷ் யாதவ் வருகிற 8ம் தேதியன்று டெல்லி செல்கிறார். அங்கு அவர்  காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்காவை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2வது வாரம் பிரியங்காவும், அகிலேஷ் யாதவும் சந்தித்து பேசினார்கள். அப்போதே இரு கட்சிகள் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்ட நிலையை எட்டியது.

வெற்றி நம்பிக்கை

சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் 300 இடங்களில் அமோக வெற்றி பெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது என சமாஜ்வாடி தலைவர்கள் கூறிவருகிறார்கள். அகிலேஷ் யாதவும் அந்த நம்பிக்கையிலேயே உறுதியாக உள்ளார். இந்த நிலையில்  சமாஜ் வாடியின் கோஷ்டி தலைவர்களான  சிவ்பால் யாதவும், அகிலேஷ் யாதவும் திடீரென்று சந்தித்து பேசினார்கள். உடைந்த கட்சியை ஒன்று படுத்த அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

பா.ஜக கூட்டணி நம்பிக்கை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி எதனையும் பெறவில்லை. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றி அதிக அளவிலான எம்.பிக்களை பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியைப்போல வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என அந்த கட்சியினர் பெரிதும் நம்புகிறார்கள்.

பிரதமர் வேண்டுகோள்

பா.ஜ.க கூட்டணி வெற்றிக்கு பிரதமர் மோடியின் பிரச்சாரமே  பா.ஜ.கவினர் உறுதியாக நம்புகிறார்கள். இதனால் லக்னோவில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில்  பிரதமர் மோடி சமீபத்தில் கலந்து கொண்டு பா.ஜ.கவை உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார்., அவர்  தற்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த மாநிலத்திற்கு வந்து பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்