மக்கள் தொகை பற்றி பா.ஜ.க எம்பி சர்ச்சை பேச்சு: விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      இந்தியா
election commission 2017 1 8

புதுடெல்லி : நாட்டின் மக்கள் தொகை பெருக் கத்துக்கு 4 மனைவிகள், 40 குழந்தைகளை வைத்திருப்பவர்கள் தான் காரணம் என பா.ஜ.க எம்பி சாக் ஷி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலின்போது மதம் அல்லது சாதியின் பெயரில் வாக்குகளை சேகரிப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள உன்னாவ் என்ற இடத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக பாஜக எம்பி சாக் ஷி மகாராஜ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று முன் தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,

‘‘நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு 4 மனைவி களை திருமணம் செய்து, 40 குழந்தைகளை பெற்றவர்கள் தான் காரணம். இந்துக்கள் அல்ல. உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமை யான சட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு இது தொடர்பான நல்ல முடிவை எடுக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும்’’ என்றார். 


அரசியல்கட்சிகள் கண்டனம் :

இதற்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் மகாராஜ் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மீரட் நிர்வாகத் திடம் அறிக்கை கேட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து லக்னோவில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி கூறும் போது, ‘‘சாக் ஷி மகராஜின் பேச்சு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மீரட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: