முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.தர வரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

துபை :  சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரரும் தமிழகதை சேர்ந்தவருமான அஸ்வின்  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இதில் இந்தியாவின் அஸ்வின் (887 புள்ளிகள்),முதலிடத்திலும்  ரவீந்திர ஜடேஜா(879புள்ளி) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சர்வ தேச டெஸ்ட் பந்து வீச்சில் இந்தியாவின் பந்து வீச்சாளர்களான இவர்கள் தொடர்ந்து முதல் இரு இடங்களில் நீடிக்கின்றனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.  பந்து வீச்சில் ,
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் 860 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

இதேபோல் இலங்கைக்கு எதிரான தொடரில் அசத்திய தென் ஆப்பிரிக்காவின்   ரபாடா 9 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி 19-வது இடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்களில் கோலியை தவிர மற்ற இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. புஜாரா 12-வது இடத்திலும் அஜிங்க்ய ரஹானே 16-வது இடத்தில் உள்ளனர்.  சர்வ தேச டெஸ்ட் தர வரிசையில் , முன்னணி வகிக்கும் அணிகள் பட்டியலில் இந்தியா 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்