அமெரிக்க புதிய அதிபருக்கான ஆலோசகர்கள் பட்டியலில் டிரம்ப் மருமகன்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      உலகம்
Jared Kushner(N) 0

வாஷிங்டன் - அமெரிக்க புதிய அதிபருக்கான ஆலோசகர்கள் பட்டியலில் டிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னெர் இடம்பெற்றுள்ளார்.

புதிய அதிபர்
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். அவர் வருகிற 20-ந் தேதி அதிபராக பதவி ஏற்கிறார். இதற்கு முன்னதாக அவரது அரசில் பதவி வகிப்பவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டிரம்பின் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டுள்ளது.

ஆலோசகர்கள் பட்டியல்
அப்பட்டியலில் ஜாரெட் குஷ்னெர் பெயர் (35) முதலிடத்தில் உள்ளது. இவர் டொனால்டு டிரம்பின் மருமகன் ஆவார். இவர் டிரம்பின் மகள் இவாங்காவை திருமணம் செய்துள்ளார். இவர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய பங்கு வகித்தார். ரியல் எஸ்டேட் வர்த்தகர் ஆவார். குஷ்னரின் நியமனத்துக்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர்பதவிகளில் உறவினர் களை நியமிக்க கூடாது. முடிவை மறுபரீசலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: