முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்தூர் பூலூம்பாளையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் : கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

உடற்பயிற்சி கூடம்

 

ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி வீரசோளிப்பாளையம் பகுதியில் அம்மா நவீன உடற்பயிற்சி கூடம் அமையவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு விரைவில் பணிகளை தொடர ஆணையிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின்கீழ் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் தங்கமணி என்ற பயனாளிக்கு 10 மாடுகளை அடைப்பதற்காக ரூ.2.20 இலட்சம் மதிப்பிலும், மரகதம் என்ற பயனாளிக்கு 6 மாடுகளை அடைப்பதற்காக ரூ.1.49 இலட்சம் மதிப்பிலும் கொட்டகை அமைக்கபட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ஆத்தூர் பகுதியில் ரூ. 14.55 இலட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் பணி முடிவுறும் தருவாயில் உள்ளதையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக காதப்பாறை நியாய விலைக் கடையினை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.கோமகன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புச்செல்வன், நீலா தங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்