காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், காஞ்சிபன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது நினைவு நாளை நகரம், பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அம்மா அவர்களுக்கு முழு உருவம் வெண்கல சிலை நிறுவ வேண்டும், வருகிற உள்ளாட்சி தேர்தலில் கழகம் நூற்றுக்கு நூறு இடம் முழுமையாக வெற்றி பெறும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும், வாக்காளர் பட்டியிலை சரிபார்க்கு மேற்கொள்ள வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஆர்.டி.சேகர், கே.யூ.எஸ். சோமசுந்தரம், நகர கழக செயலாளர் என்.பி.ஸ்டாலின், ஒன்றிய குழு தலைவர்கள் தும்பவனம் ஜீவானந்தம், வரதராஜீலு, கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, அக்ரிநாகராஜ், சசிகுமார், தங்கபஞ்சட்சரம், கே.சி.எம்.விஜய் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: