முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவைப்பட்டால் பாக். எல்லையில் மீண்டும் துல்லிய தாக்குதல் நடத்தப்படும் : ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து எல்லையில் மீண்டும் துல்லிய தாக்குதல் நடத்தப்படும் ராணுவ தளபதி என பிபின் ராவத் குறிப்பிட்டு உள்ளார்.

மீண்டும் தாக்குதல்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் “தேவைப்படுமாயின் மீண்டும் துல்லிய தாக்குதல் முன்னெடுப்போம்” என கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானின் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை பாகிஸ்தான் மறைக்க முயற்சி செய்தது, கடைசியில் எல்லையில் அத்துமீற தொடங்கியது. இந்தியா கொடுத்த பதிலடியில் அடங்கியது.

கடிதம் எழுதலாம்
“ராணுவ வீரர்கள் எந்தஒரு பிரச்சனையை எதிர்க்கொண்டாலோ, புகார் தெரிவிக்கவேண்டும் என்றாலோ என்னிடம் நேரடியாகவே தெரிவிக்கலாம்,” என்றார். ராணுவ தலைமையகங்களில் கருத்துக்கள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்காக பெட்டியானது வைக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் எந்தஒரு பிரச்சனையும் எதிர்க்கொண்டால் அவர்கள் தங்களுடைய புகாரை புகார் பெட்டியில் போடலாம், நாங்கள் பிரச்சனையை சரிசெய்வோம், என்றும் குறிப்பிட்டு உள்ளார் ராவத்.

தெரிவிக்கமாட்டோம்
“புகார் தெரிவிக்கும் ராணுவ வீரர்கள் தங்களுடைய அடையாளத்தை புகாரின் இறுதியில் தெரிவிக்கலாம். நாங்கள் அவர்களுடைய அடையாளத்தை வெளியே தெரிவிக்கமாட்டோம் என்பதை உறுதிசெய்கிறோம்,” என்றும் ராவத் பேசிஉள்ளார்.  இதனையடுத்து ராணுவ வீரர்கள் நடவடிக்கையில் திருப்தி அடையவில்லை எனில் பிற வழிகளை தேர்வு செய்யலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்