ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      ஈரோடு
13 01 2017-2

ஈரோடு வட்டம், காசிபாளையம் கிராமம், சூரம்பட்டி வலசு பகுதியில் பெரும்பள்ளம் அணைக்கட்டு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வணைக்கட்டின் மூலம் புதூர், இலக்காபுரம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி கிராமங்களில் உள்ள 2545 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் வாய்க்கால் பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நிலத்தடிநீர் செறிவூட்டுவதல் மூலம் குடிநீர் வசதி பெறுகிறது.

          மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பெரும்பள்ளம் வாய்க்கால் கரை ஓரங்களிலும் பெரும்பள்ளம் அணைக்கட்டு நீர்ப்பரப்பு பகுதியிலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த 695 வீடுகள் பொதுப்பணித்துறை மூலம் அகற்றப்பட்டன.

          மேலும், நீதிமன்ற உத்தரவின்படி பெரும்பள்ளம் அணைக்கட்டை தூர்வார விவசாயப் பெருமக்களுக்கு இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள மாவட்ட கலெக்டர்  மூலம் அனுமதி வழங்கப்பட்டது. விவசாயப் பெருமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத சூழ்நிலையில் பெரும்பள்ளம் அணைக்கட்டை தூர்வார தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் அனுமதி கோரினர்.  மாவட்ட கலெக்டர்  அனுமதியின் பேரிலும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மேற்பார்வையின்படியும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஈரோடை தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து டாக்டர்.சுதாகர், சுதா மருத்துவமனை அவர்களின் நிதி உதவியில் பெரும்பள்ளம் அணைக்கட்டு தூர்வாரும் பணி கடந்த 18.12.2016 அன்று மாவட்ட கலெக்டர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.

          தற்போது அணைக்கட்டு தூர்வாரும் பணி பெரும்பகுதி நிறைவுற்ற சூழ்நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர், .  ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும், தூர்வாரிய பின்னர் இருகரைகளிலும் மரங்களை நடுதல், பூங்கா அமைத்தல், பெரும்பள்ளம் நீர்ப்பரப்பு பகுதியில் கழிவுநீர் கலக்காமல் இருப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

          சூரம்பட்டி அணைக்கட்டு தூர்வாரப்பட்டதால் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பு பகுதிகள், சுத்தானந்தன் நகர் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் சுமார் 500 ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனை தீர வாய்ப்புள்ளது. பெரும்பள்ளம் அணைக்கட்டின் பாசன நிலங்கள் சுமார் 2545 ஏக்கர் பயனடையும். அணைக்கட்டு தூர்வாரப்பட்டதால் 10 மி.க.அடி தண்ணீர் தேங்கும் அளவிற்கு அணைக்கட்டின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

        இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது செயற்பொறியாளர், வீ.இராசு, உதவிசெயற்பொறியாளர் சே.இராதாகிருஷ்ணன், ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர்.சுதாகர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு (எ) முத்துசாமி, சிறகுகள் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: