முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 4 வயதில் நூலகர் ஆன சிறுமி !

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் 1000 புத்தகங்கள் படித்ததால் 4 வயது சிறுமி நூலகர் ஆனாள். இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி என்ற பெருமையை இவள் பெற்றாள்.

படிப்பதில் ஆர்வம்
அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள செயின்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் ஹலீமா. இவர் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் ஆவார். இவரது மகள் பாலியாமேரி அரானா (4). இவளுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். தனது 3 வயதில் படத்துடன் கூடிய புத்தகத்தை படிக்க தொடங்கினாள். அதை பார்த்த தாயார் ஹலீமா அவளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டினார். அதைத் தொடர்ந்து 4 வயதில் சுமார் 1000 புத்தகங்களை அரானா படித்து முடித்தார்.

கவுரவிக்க முடிவு
இதுகுறித்து அமெரிக்க நூலக கூட்டமைப்புக்கு அரானாவின் தாயார் ஹலீமா விவரமாக கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து நூலக கூட்டமைப்பு அரானாவை கவுரவிக்க முடிவு செய்தது. அதையடுத்து அரானா ஒருநாள் நூலகராக பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அமெரிக்க நூலக கூட்டமைப்பு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட அரானா நூலகர் இருக்கையில் அமர வைத்து கவுரவிக்கப்பட்டார்.

நூலகரான சிறுமி
இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி என்ற பெருமையை இவள் பெற்றாள்.குழந்தைகளிடையே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க எதிர்காலத்தில் இதுபோன்று சிறுவர்களை கவுரவிக்க அமெரிக்க நூலக கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்