ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் பொங்கல் விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      வேலூர்
a MINISTER 2

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை பொங்கல்  விழா நடைபெற்றதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.  ஆரணியில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் காணும் பொங்கல் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஆரணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு அருகிலுள்ள ஆற்றுத்திருவிழாவில் கலந்துகொண்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் செயல் அலுவலர் சசிகலா, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பேரவை நிர்வாகி பாரி பாபு, முன்னாள் மாவட்டகவுன்சிலர் ஜெ.சம்பத், மாணவரணி குமரன், தொழிற்சங்க நிர்வாகி உதயசங்கர் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: