தீவிபத்தில் குடிசை சேதம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடுமாவட்டம் கொடுமுடி அருகே உள்ள அண்ணமார் கோயில், சுக்கிரம்பாளையத்தில் நேரிட்ட தீ விபத்தில் திங்கள்கிழமை குடிசை சேதமடைந்தது.

  அண்ணமார்கோயில், சுக்கிரம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளைசாமி (67).  தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், தனது குடிசை வீட்டில் வெள்ளைசாமி மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ குடிசையில் பரவியது. இதுகுறித்த தவலின்பேரில் கொடுமுடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் குடிசையில் இருந்த துணிகள், சமையல் பாத்திரங்கள், கட்டில் உள்பட ரூ. 30,000 மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து, மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: