முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் விலகினால்தான் பேச்சு வார்த்தை : பிரதமர் மோடி உறுதி

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் விலகி நடந்தால்தான் அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.  இந்தியாவிற்கு அருகே உள்ள தேசமான பாகிஸ்தான் தனது எல்லை வழியாக இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் , பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகள் மூலமாக தாக்குதல் நடத்துகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதியன்று இரவு பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில்  பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

அவர் ராணுவ வீரர்கள் உடையில் வந்து இந்த தாக்குதல்களை நடத்தினார்கள் . இதில் 7 வீரர்கள் பலியானார்கள்.  இதேப்போன்று தாக்குதல் நடத்திய 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளும் நமது வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  பாகிஸ்தானில் முகாமிட்டு தீவிரவாத பயிற்சி எடுத்து வரும் லஷ்கர்  இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதை ஒன்றையே கருத்தில் கொண்டுள்ளன. அந்த தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி, பயிற்சி போன்ற ஆதரவுகளை அளித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்