முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னுடன் போட்டியிட தயாரா? உக்ரைன் மல்யுத்த வீரருக்கு யோகா குரு ராம்தேவ் சவால்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற உக்ரைன் மல்யுத்த வீரருக்கு தன்னுடன் காட்சி போட்டியில் மோத தயாரா? என்று யோகா குரு பாபா ராம்தேவ் சவால் விடுத்துள்ளார்.

மல்யுத்த லீக் போட்டி

புரோ மல்யுத்த லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் அரியானா ஹேமர்ஸ் தகுதி பெற்று விட்டது. மற்றொரு அணி எது என்பது நாளை தெரியும். 2-வது அரை இறுதியில் பஞ்சாப் ராயல்ஸ்- மும்பை மராத்தி அணிகள் மோதுகின்றன. 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உக்ரைன் மல்யுத்த வீரர் ஆன்ட்ரே ஸ்டேட்னிக் இந்தப் போட்டியில் பயிற்சியாளராக பங்கேற்றுள்ளார்.

ராம்தேவ் சவால்

இவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சுசில்குமாரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருந்தார். இறுதிப் போட்டியில் தோற்றதால் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த ஒலிம்பிக்கில் சுசில்குமார் வெண்கலம் பெற்றார். இந்த நிலையில் ஆந்த்ரே தன்னுடன் காட்சி போட்டியில் மோத தயாரா? என்று யோகா குரு பாபா ராம்தேவ் சவால் விடுத்துள்ளார்.

யோகா பலம் தெரியும்

புரோ மல்யுத்த ‘லீக்‘ போட்டியின் 2-வது அரை இறுதிக்கு முன்பு இரண்டு காட்சி ஆட்டம் நடக்கிறது. நான் ஏற்கனவே தேசிய அளவிலான மல்யுத்த வீரர்களுடன் மோதி விட்டேன். சர்வதேச வீரர்களுடன் மோத விரும்புகிறேன். பெய்ஜிங் ஒலிம்பிக்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற உக்ரைனை சேர்ந்த ஆந்த்ரேவுடன் கண்காட்சி போட்டியில் விளையாட தயாராக இருக்கிறேன். அப்போது தான் யோகாவின் உண்மையான பலம் தெரியும். இவ்வாறு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்