முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச தேர்தல்: அகிலேஷ் யாதவ் கட்சி 300 தொகுதியில் போட்டி

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - உத்தரபிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 300 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 103 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

7 கட்டங்களாக தேர்தல்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 403 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்ட சபைக்கு பிப்ரவரி 11-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

காங். கூட்டணி
4-வது கட்சியாக திகழும் காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பவில்லை. அந்த கட்சி அகிலேஷ் யாதவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி உத்தரபிரதேச சட்டசபையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதன்படி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 300 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 103 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராஷ்டீரிய லோக்தளம் இல்லை
ஆனால் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகள் போதாது கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம் வலியுறுத்தினர். அவர் கூடுதல் இடங்களை வழங்க இயலாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமாஜ்வாடி 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் 103 தொகுகளிலும் போட்டியிடும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட ராஷ்டீரிய லோக்தளம் கடைசி நேரத்தில் சேர்க்கப்படவில்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்