முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் வருகிற 24ம் தேதி நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் மாவட்டத்தில் நுகர்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி விவாதிப்பது மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதனை களைவது மற்றும் நுகர்வோர்களின் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக 24.1.2017 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் "எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்" திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள், எரிவாயு வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகள் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக நடைபெற தேவையான ஆலோசனைகளை வழங்கலாம் என்று மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago