முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் தோட்டம் வைத்திருபவர்களுக்கான சில டிப்ஸ்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

 1.  வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்க ஊற்றலாம் செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும்.

 2. முட்டை ஒடுகளை காயவைத்து நன்க தூளாக்கி போட வேண்டும் இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல வரமாகும்.

3. 4 புஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்.

4. அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் செழிப்பாக வளரும்.
5. சாம்பல் சிறந்த உரம் கிடைத்தால் போடலாம்.

6. ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள நீரில் போட்டு வெயிலில் வைக்க வேண்டும். நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

7.காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம்.

எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம்:

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: புளி, புங்கன், நாவல், நெல்லி, சவுக்கு, வேம்பு, வாகை.

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: தேக்கு, முங்கில், வேம்பு, கருவேல், சவுணடல், புளி.

களர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: குடைவேல், வேம்பு, புளி, பூவரசு, வாகை.

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: சவுக்கு, புண்கள், இலவம், புளி, வேம்பு.

அமில நிலம்: குமிழ், சில்வர் ஓக், சதுப்பு நிலம்,

ஈரம் அதிகம் உள்ள நிலம்: பெரு முங்கில், நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கள்.

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: ஆயிலை, பனை, வேம்பு, குடைவேல், செஞ்சந்தனம்.

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்: வேம்பு, புங்கன், புளி, வெள்வேளசுபாபுல், 

குறைந்த ஆழமான மண்: ஆயிலை, ஆச்சா, வேம்பு, புளி வகை, பனை.

களி மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: வாகை, புளி, வேம்பு, புங்கள், சுபாபுல், நெல்லி, கரிமருது, கருவேல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்