Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2026      இந்தியா
Modi -2024-07-02

புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2026 குறித்து பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது. 2047இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். நாட்டு மக்களின் தொழில திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார். உலகத்தின் டேட்டா சென்டர் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். பல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்ஜெட் இந்தியாவின் உலகளாவிய பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியாவின் 140 கோடி குடிமக்கள் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதில் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறவும் விரும்புகிறோம்.

இது நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களின் உறுதிப்பாடாகும். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதிலும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தும் தனித்துவமான பட்ஜெட் இது. மேலும், அதிக மூலதனம் மற்றும் அதிக வளர்ச்சியின் கலவையையும் பட்ஜெட் கொண்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து