முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல் சைவ வேளாளர் ஐக்கிய சங்க கூட்டத்தில் தீர்மானம்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      தூத்துக்குடி

திருச்செந்தூர்,

 

திருச்செந்தூரில் நடைபெற்ற சைவ வேளாளர் ஐக்கிய சங்க கூட்டத்தில் பீட்டா அமைப்பினை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு, க.வேலாயுதம் பிள்ளை தலைமை வகித்தார். செயலர் ப.சந்தணராஜ், பொருளாளர் வி.சி.ஜெயந்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பொன்னையா பிள்ளை, தியாகி சண்முகம் பிள்ளை மனைவி முத்துலெட்சுமி அம்மாள், முன்னாள் சங்க தலைவர் எஸ்.இராமன் மற்றும் அவரது தாயார் எஸ்.ஆறுமுகத்தம்மாள், முன்னாள் நிர்வாகஸ்தர் எஸ்.முத்துக்குமார் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சாகித்ய அகாதமி விருது பெற்ற வண்ணதாசனுக்கு பாராட்டு தெரிவித்தும், ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையின்றி அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகஸ்தர்கள் க.மெய்கண்டமுத்து, சோ.பரமேஸ்வரன், ச.இசக்கிமுத்து, நெ.ஆனந்தராமச்சந்திரன், பொ.வெ.பொன்முருகேசன், எஸ்.சீனிவாசன், சு.முத்துக்குமார், வி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago