முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      ஈரோடு

குடியரசு தின விழாஇன்று  (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை வழங்க உள்ளார்.அதுமட்டுமின்றி விழாவில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

ஆயிரம் மாணவ-மாணவிகள்

 

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில்  காலை நடைபெற்றது.வடுகபட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எலவமலை கிரேஸ் மெட்ரிக் லேம்நிலைப்பள்ளி, ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூரப்பாளையம் நந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் கிறிஸ்து ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு நடனம் ஆடினார்கள்

தேசபக்தி பாடல்கள்

.இதில் தேசபக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், படுகா நடனம், யோகாசனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி பார்வையிட்டார்.அப்போது அவர், மாணவ-மாணவிகள் நடனத்தில் செய்த தவறை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன், ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி மகாராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கீதா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதேபோல் ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையையும் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்