முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய வறட்சி ஆய்வுக்குழுவினரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த முழுவிபர அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது:அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தகவல்.

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ரோஜா இல்லம் விருந்தினர் மாளிகையில் விவசாய வறட்சி பாதிப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சு.கணேஷ், , மத்திய, மாநில வறட்சிக்குழு, தமிழ்நாடு வேளாண் இயக்குநர் தெட்சிணாமூர்த்தி, மத்திய ஊரக சார்புச்செயலாளர் எஸ்.பி.திவாரி, காவேரி மற்றும் தென்னக நீர்ப்பாசன இயக்குநர் (கண்காணிப்பு) ஆர்.அழகேசன்  ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து  முன்னிலையில்,  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்  நேற்று (25.01.2017) கலந்தாய்வு மேற்கொண்டார்.  இந்த கலந்தாய்வில்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும்.  இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ மழை கிடைக்கப்பெறும்.  ஆனால் நடப்பாண்டில் 168.3 மி.மீ மழையே கிடைக்கப்பெற்றது.  இதனால் மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கும் வகையில் வறட்சி பாதித்த இடங்களை நேரடி ஆய்வு செய்து பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து தமிழகஅரசிற்கு அறிக்கை அளித்திட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் இப்பணிகளை மேற்பார்வையிட்டு அறிக்கை அளிக்கும் வகையில்  அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை தமிழகஅரசு அமைத்துள்ளது.  இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வறட்சியால் பயிர் கருகிய வயல்வெளிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.  இதில் வறட்சியால் பயிர் கருகிய வயல்வெளிகள் 1.05 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.  இன்று வருகை தந்துள்ள மத்திய வறட்சிக்குழுவினர் அறந்தாங்கி வட்டாரம், பள்ளத்திவயல், கொண்ணமடை டேங்க், பெருங்காடு, ஏகணிவயல், ஏகப்பெருமா@ர் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.  மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியினால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுவிபரத்தினையும் ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்பார்கள்.  இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஏ.இரத்தினசபாபதி (அறந்தாங்கி), பி.ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, இணை இயக்குநர் (வேளாண்மை) அண்ணாமலை, கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்