முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ், தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பிரதான கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நேற்று (27.01.2017) நடைபெற்றது.

தோட்டக்கலை பயிர்

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 58.08 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1350 மெ.டன் யூரியா, 637 மெ.டன் டி.ஏ.பி, 523 மெ.டன் பொட்டாஷ்; மற்றும்; 882 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.

இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள்; வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 277 மெ.டன், கூட்டுறவுத்துறை மூலம் 13 மெ.டன் தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 70 மெ.டன் என கூடுதலாக 360 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 19 மெ.டன், கூட்டுறவுத் துறையில் 21 மெ.டன் மற்றும் தனியார்; கடைகளில் 2 மெ.டன் ஆக மொத்தம் 42 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.

மானிய விலையில் நுண்ணீர் பாசனத் திட்டம் தற்போது பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண் துறை மூலம் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது. சிறு / குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு / குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை யோகேஸ்வரி, கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், கோட்டாட்சியர்கள் (அரியலூர்) மோகனராஜன், (உடையார்பாளையம்) டினாகுமாரி, வேளாண்மை இணை இயக்குநர் சதானந்தம், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்