முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாலயா பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் இரத்ததான முகாம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      சென்னை

திருவள்ளுர் அடுத்த கசுவா கிராமத்திலுள்ள சேவாலயா சேவை மையம்,பள்ளியில் 68-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக பி.என்.ஒய் மெலன் இயக்குநர் கோபாலன் விஸ்வநாதன் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.சிறப்பு விருந்தினர் பேசியதாவது சேவாலயாவின் உன்னத சேவையை நான் வியந்து பாராட்டுகிறேன்.தேசபக்திக்கு வயது கிடையாது.நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் எப்போதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளின் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள மூலம் தேசபக்தியை ஊக்குவித்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

 

பின்னர் கோலப்போட்டி,விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அஷ்வதா ராகவேந்திரா பி.என்.ஒய் நிறுவனத்தின் உதவியுடன் நர்சிங் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,பணி நியமன ஆணைகள் வழங்கினார். பி.என்.ஒய் நிறுவன ஒரு பகுதி உதவியுடன் கூடைப்பந்தாட்ட மைதான வளாகத்தை பி.என்.ஒய் மெலன் இயக்குநர் கோபாலன் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

 

பின்னர் சேவாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம்,இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமில் முன்னாள் சேவாலயா மாணவர்கள்,சேவாலயா ஊழியர்கள் இரத்தம் வழங்கினார்கள்.முன்னதாக சேவாலயா நிறுவனரும்,நிர்வாக அறங்காவலருமான முரளிதரன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.சேவாலயா ஆலோசகர் அமர்சந்த் ஜெயின் விழா நிறைவாக நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்