செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      வேலூர்

செங்கம் அடுத்த நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 3வது ஆண்டாக முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். பேராசிரியை ரூபி வரவேற்று பேசினார் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அரிமா சங்க பயிற்றுனர் வந்தவாசி சரவணன் கலந்துகொண்டு பேசினார் அப்போது முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் ஒருவருக்கொருவர் வாய்ப்புகளை பரிமாறிகொள்ள பயன்படும் உங்களுக்கு என ஒரு அடையாளத்தை வளர்த்துகொள்ளுங்கள் உங்கள் குடும்ப சூழ்நிலை உங்களால் உயரவேண்டும் கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள் பிரச்சனை இல்லாமல் வாழ்வு இல்லை சச்சின் தென்டுல்கர் அம்பானி ஜெயலலிதா அப்துல்கலாம் ரஹ்மான் இப்படி சாதித்தவர்கள் அனைவருமே வாழ்கையில் மிக சிரமபட்டவர்களே தலைகனம் இல்லாத தன்நம்பிக்கையுடன் வேலை கேட்பவர்களாக தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக எதையும் மாற்றியோசித்து வாய்புகளை உருவாக்கி வளரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவினை வாழ்த்தி ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் பேசினார் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: