பள்ளிபாளையத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 1875 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.69.85 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மதிவண்டிகள்: அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      நாமக்கல்
2

நாமக்கல்,ஜன.29 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி, பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (28.01.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன்  முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ஜி.மகாத்மா  தலைமை வகித்தார். இவ்விழாவில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி  கலந்து கொண்டு பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விதமாக 55 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 252 மாணவர்களுக்கும், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 401 மாணவியர்களுக்கும், கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 68 மாணவர்கள், 67 மாணவியர்கள் என மொத்தம் 135 மாணவ, மாணவியர்களுக்கும், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 293 மாணவர்களுக்கும், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 200 மாணவியர்களுக்கும், பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள், 8 மாணவியர்கள் என மொத்தம் 37 மாணவ, மாணவியர்களுக்கும், சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 52 மாணவர்கள், 29 மாணவியர்கள் என மொத்தம் 81 மாணவ, மாணவியர்களுக்கும், குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கங்மாள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 317 மாணவியர்களுக்கும், சங்ககிரி மேற்கு சங்கர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 33 மாணவர்கள், 31 மாணவியர்கள் என மொத்தம் 64 மாணவ, மாணவியர்களுக்கும், குள்ளநாய்க்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள், 18 மாணவியர்கள் என மொத்தம் 46 மாணவ, மாணவியர்களுக்கும், பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள், 28 மாணவியர்கள் என மொத்தம் 49 மாணவ, மாணவியர்களுக்கும் என ஆக மொத்தம் 776 மாணவர்களுக்கும், 1039 மாணவியர்களுக்கும் என 1875 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.69,85,163 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி   55 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கு.அருளரங்கன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ். தலைவர் பி.என்.கந்தசாமி, பள்ளிபாளையம் முன்னால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னால் நகர்மன்ற தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, முன்னால் வார்டு உறுப்பினர்கள், முன்னால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட கூட்டுறவாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: