முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      நீலகிரி
Image Unavailable

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

                               கடும் வறட்சி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கடும் வறட்சி நிலவியுள்ளது. வனப்பகுதி முழுவதும் காய்ந்த நிலையில் காணப்படுகின்றது. நீர், நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. கடும் வறட்சியின் காரணமாக மரம், செடி, கொடிகளும் புற்களும் எளிதில் தீப்பற்றும் நிலையில் உள்ளது. ஆகையால் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். வாகனங்களில் செல்வோர் சிகரெட் துண்டுகளை வீசிவிட்டுச்சென்றால் அப்பகுதியில் உடனடியாக தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

                   தீ தடுப்பு கோடுகள்

எனவே முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தெப்பக்காடு முதல் கக்கநள்ளா சோதனை சாவடி வரை இரண்டு புறமும் உள்ள காட்டுத்தீ ஏற்படாமல் இருக்கும் வகையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து தெப்பக்காடு வனச்சரகர் அந்தோணிசாமி கூறுகையில் முதுமலை புலிகள் காப்பக பகுதி தமிழ்நாட்டையும், கர்நாடகாவையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகங்களில் செல்வோர் புகைபிடித்து விட்டு சிகரெட், பீடி துண்டுகளை சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றால் அதன் மூலம் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சிகரெட் துண்டுகள் மூலம் ஏற்படும் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்கவும், அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்