முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலையோரத்தில் கிடந்த ஆஞ்சநேயர் சிலை மீட்பு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      நீலகிரி

கக்கநள்ளா சோதனை சாவடி அருகே சாலையோரத்தில் கிடந்த ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டது.

                                   ஆஞ்சநேயர் சிலை

ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மாநில எல்லையான கக்கநள்ளாவில் சோதனை சாவடி உள்ளது. இங்கு மதுவிலக்கு போலீசார் உட்பட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கக்கநள்ளா சோதனை சாவடிக்கும், தெப்பக்காட்டிற்கும் இடையேயான சாலையோரத்தில் ஒரு சாக்குப்பை ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ஆஞ்சநேயர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

                                       25 கிலோ எடை

அதனையடுத்து அந்த சிலையை மீட்டவர்கள் அதனை மசினகுடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சிலை 3 அடி உயரமும், 25 கிலோ எடைகொண்ட பித்தளையால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையாகும். இது தொடர்பாக மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சிலையை யார், எங்கிருந்து கடத்தினார்கள் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்