முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரட்டவாடி கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமணை – அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்துவைத்தார்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமணை திறப்புவிழா நடைபெற்றது. 2016-17ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 கால்நடை மருந்தகங்கள் மருத்துவ மனைகளாக தரம் உயர்த்தப்பட்டது ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 113 கால்நடை மருத்துவமனைகளுடன் இதையும் சேர்த்து 120 கால்நடை மருத்துவமனைகளாகும் இதில் செங்கம் ஒன்றியம் அரட்டவாடி கிராமத்தில் இயங்கிவந்த கால்நடை மருந்தகம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. விழாவிற்கு வனரோஜா எம்பி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் கற்பகம் கூட்டுறவு பண்டகசாலை இயக்குநருமான பெருமாள்நகர் ராஜன் செங்கம் ஒன்றிய அதிமுக செயலாளரும் மாவட்ட வணிகவரி ஆலோசனைக்குழு உருப்பினருமான மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டு புதிய கால்நடை மருத்துவமனை திறந்துவைத்தார் முடிவில் டாக்டர் அருண் நன்றி கூறினார். விழாவில் மாநில கூட்டுறவு ஆணைய தலைவர் அமுதா அருணாச்சலம் தண்டராம்பட்டு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜா (எ) தேவராஜன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தர்மலிங்கம்ம தலைமைகழக பேச்சாளர் வெங்கட்ராமன் கூட்டுறவு சங்க தலைவர்கள் வலையாம்பட்டு சங்கர் பரமனந்தல் சங்கர் பள்ளிப்பட்டு சங்கர் ஜெகதீசன் ஆர்.ஜி.குமார் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் கலைவாணன் குப்பன் ஜெயபிரகாஷ் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் அன்பழகன் பேரவை மாவட்ட துணைத்தலைவர் பன்னீர் பேரவை நகர செயலாளர் குமார் வழக்கறிஞர் செல்வம் முரளிதரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் செங்கம் ஊராட்சிஒன்றிய ஆணையாளர் கருணாகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஊராட்சி செயலாளர் சிவா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்