முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி: கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி.

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தியாகிகள் தினத்தினை முன்னிட்டு, (தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம்) தியாகிகளை நினைவு கூரும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியினை கலெக்டர்  மு.கருணாகரன்  தலைமையில்  அரசு அலுவலர்கள் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கலெக்டர்  மு.கருணாகரன்  தலைமையில்  தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள், ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும், கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனம் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (கணக்கு) தங்கம், (நிலம்) உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, கலெக்டர் அலுவலக மேலாளர் (வருவாய் பிரிவு) தேவர்பிரான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்