முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      ஈரோடு

 

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். விழாவில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவரும், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அக்னி எம்.சின்னசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பி.எம்.சிவசங்கரன் வழங்கினார். நவரசம் கல்லூரியின் பொருளாளர் சி.பழனிசாமி, ஒளிரும் ஈரோடு ரத்த சுத்திகரிப்பு நிலைய நிர்வாக அதிகாரி எஸ்.வெங்கிடுசாமி ஆகியோருக்கு மனிதநேய சேவைக்கான விருதும், கொங்கு அறிவாலயத்தின் தாளாளர் ஆர்.ராஜேந்திரன், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.சாவித்திரி ஆகியோருக்கு தொழிற்சேவை விருதும் வழங்கப்பட்டன.

 

விழாவில் மாவட்ட முன்னாள் ஆளுநர் ஈ.கே.சகாதேவன், ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.சக்திநல்லசிவம், உதவி ஆளுநர் பி.ஜி.சரவணன், டி.ஜி.ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சங்கத்தின் திட்டத்தலைவர் வி.ராஜமாணிக்கம் வரவேற்று பேசினார். முடிவில் செயலாளர் ஆர்.ஜோதிக்குமார் நன்றி கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்