முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்கதிர்பூர் கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கஜலட்சுமி தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி மாதம் 30ம் தேதி ஆண்டு தோறும் உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 30.01.2017 -ம் தேதி தொழுநோய் விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் விதமாக தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் " ஸ்பர்ஷ்" தொழுநோய் விழிப்புணர்வு பிரசார முகாமை நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

 

காஞ்சிபுரம் வட்டம், கீழ்கதிர்ப்பூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் "ஸ்பர்ஷ்" தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர்.

 

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை அனைவருக்கும் தெரிவிக்க "ஸ்பர்ஷ்" தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

தொழுநோய் லெப்ரா பாக்டிரியா என்ற கிருமியினால் உருவாகிறது, இது தொற்றுநோய் அல்ல. இந்நோய்க்கு இலவசமான சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. ஆரம்ப நிலையிலேயே தொழுநோயை கண்டுபிடித்தால் தொடர் சிகிச்சை அளித்து ஊனமற்றவர்களாக வாழவைக்கலாம்.

 

சிவந்த அல்லது வெளிறிய 1 அல்லது அதற்கும் மேற்பட்ட தேமல்கள், உணர்ச்சியற்று வறண்டு வலியற்று இருத்தல். எண்ணெய் தடவியது போன்று தோல், முகம் மற்றும் கண் இமைகளில் முடியில்லாது இருத்தல், காது, காதுக்கு பின்னாலும் சிறு, சிறு முடிச்சு(nடினரடநள) போன்ற கட்டிகள் இருத்தல். கை, கால்களில் சதை குறைந்து வறண்ட உணர்ச்சியற்ற நிலை ஆகியவை தொழு நோயின் அறிகுறிகளாகும்.

 

கூட்டுமருத்து சிகிச்சை வழங்குவதன் மூலம் தொழுநோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உதாசீனப்படுத்தாமல் அரவணைத்து மற்றவர்களை போல் இயல்பாய் வாழ உதவுவோம். நம் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட அறிகுறிகள் உள்ளவர்களை, பொது சுகாதார ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி தொடர் கூட்டுமருந்து சிகிச்சை வழங்கி, தொழுநோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.செந்தில்குமார் காஞ்சிபுரம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமசாமி, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி (திருப்புட்குழி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நல்வாழ்வு துப்புரவு குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், மாவட்ட நலக்கல்வியாளர், சுகாதார பணியாளர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்