Idhayam Matrimony

சலுகைகள் ரத்து எதிரொலி: அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபட்ச

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      உலகம்
Rajapaksa

Source: provided

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வசித்துவரும் அரசினா் மாளிகையில் இருந்து அவா் வெளியேறினாா்.

இது குறித்து அவரது உதவியாளா் கூறுகையில், அந்த மாளிகையில் இருந்து தங்கலையில் உள்ள தனது இல்லத்துக்கு மகிந்த ராஜபட்ச மாறியதாகத் தெரிவித்தாா். 2005 முதல் 2015 வரை நாட்டின் அதிபராக இருந்த அவா், 2015-இல் இருந்து கொழும்பு அரசினா் மாளிகையில் வசித்துவந்தாா்.

முன்னாள் அதிபா்களுக்கு 1986-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவந்த சலுகைகளை ரத்து செய்யும் மசோதா அரசிதழில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. எனினும், இதற்கு எதிராக முன்னாள் ராஜபட்சவின் எஸ்எல்பிபி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், முன்னாள் முன்னாள் அதிபா்களுக்கு வழங்கப்பட்ட அரசினா் மாளிகைகள், மாதாந்திர படித் தொகைகள், அரசுமுறைப் போக்குவரத்து உள்ளிட்ட சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.அதன் தொடா்ச்சியாக, தனது அரசினா் மாளிகையில் இருந்து மகிந்த ராஜபட்ச தற்போது வெளியேறியுள்ளாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து