முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Randhir-Jaiswal-2025-09-12

புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:--

ரஷிய ராணுவத்தில் துணை ஊழியர்களாக இந்திய நாட்டினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை ரஷியா நிறுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ரஷிய ராணுவத்தில் சேரும் வாய்ப்பை இந்திய இளைஞர்கள் ஏற்கக்கூடாது. ரஷிய ராணுவத்தில் சேர சலுகைகளை ஏற்க வேண்டாம். இது ஆபத்து நிறைந்ததாகும்.கடந்த ஒரு ஆண்டாக இந்திய அரசு இதன் ஆபத்துகளை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கேற்ப இந்திய குடிமக்களை எச்சரித்துள்ளது. ரஷிய ராணுவத்தில் தற்போது சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற துணை பணியாளர்களாகப் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்.இந்த விஷயத்தை டெல்லி மற்றும் ரஷியாவில் உள்ள ரஷிய அதிகாரிகளிடமும் எடுத்து கூறி உள்ளோம். இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து எங்கள் நாட்டினரை விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் குடும்பத்தினருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து