முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக்கோப்பையில் அனைத்து நடுவர்களும் பெண்கள்: ஐ.சி.சி. முடிவு

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய்: மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐ.சி.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலின சமத்துவம்... 

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களுக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. ஆடவர் அணிக்கு நிகராக உயர்த்தியது. இந்நிலையில், மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நடுவர்களும் மகளிராக இருப்பார்களென அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் இருக்க வேண்டுமென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதிபலிப்பாக.... 

இந்த நடுவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய வீராங்கனைகளான விருந்தா ரதி, என். ஜனனி, காய்த்ரி வேணுகோபாலன், ஜிஎஸ் லக்‌ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கூறியதாவது: நடுவர்கள் குழுவில் அனைவரையும் பெண்களாக பணியமர்த்தியது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் என்பதின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக பார்க்கிறோம். இந்த வளர்ச்சி அடையாள மதிப்பைத் தாண்டியது. கண்ணால் காணத்தக்க, வருங்காலத்தில் பலரையும் உத்வேகம் கொள்ளதக்க வாய்ப்பாக அமையும் என்றார். இந்த உலகக் கோப்பையில் 8 அணிகள் மோதுகின்றன. நவ.2-ம் தேதி இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன. 

போட்டி நடுவர்கள்: 

ட்ரூடி ஆண்டர்சன், ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜிஎஸ் லட்சுமி, மிஷேல் பெரேரா. நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கேன்டேஸ் லா போர்டே, கிம் காட்டன், சாரா தம்பனேவானா, ஷதீரா ஜாகிர் ஜெஸி, கெரின் கிளாஸ்டெ, என். ஜனனி, நிமாலி ஃபெரேரா, கிளாரி பொலோசக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து