முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து செய்யும் பணி கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தொடங்கி வைத்து கூறியதாவது-

                                       30,000 ரோஜா செடிகள்

ஊட்டி ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 4000 வீரியரக ரோஜா ரகங்களில் சுமார் 30,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. உலக பிரசித்தி பெற்ற ரோஜா பூங்காவில் இந்தாண்டு மே மாதத்தில் நடைபெறும் 15_வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு அரசு ரோஜா பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சுமார் 30 ஆயிரம் வீரியரக ரோஜா ஒட்டுச்செடிகளில் முதல் கட்டமாக கவாத்து செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குநர் மணி, துணை இயக்குநர் உமாராணி, உதவி இயக்குநர் மீராபாய் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago