திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் சிவன்வாயல் ஊராட்சியில் ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபா கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் சிவன்வாயல் ஊராட்சியில் ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபா கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

 

மாவட்ட கலெக்டர் கூறியதாவது " பொது மக்கள் அனைவரும் தங்கள் ஆரேக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முன்னதாக அறிகுறிகளை கண்டறிந்து முன்னேச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்நோய் தொற்று நோய் அல்ல. உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பின்னமை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்டத்தில் நோய் அறிகுறிகளை குறைத்து. தொழுநோய் அற்ற மாவட்டமாக மாற்றவேண்டும்" என்று கூறினார்.முன்னதாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கிராம பொது மக்கள் அனைவரும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். சிவன்வாயல் கிராமத்தை சேர்ந்த தொழு நோய்க்காக சிகிச்சை பெற்று குணமடைந்த நபர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் பொறுப்பு டி.முத்துக்குமார், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மருத்துவர் தயாளன், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) மருத்துவர் டி. கனிமொழி,வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவதனம், வட்டார மருத்துவ அலுவலர் (திருவள்ளுர் ஒன்றியம்) மரு.பிரியா நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: