முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 248 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  பேசும் போது தெரிவித்தாவது:

அம்மா  தமிழக மக்களுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் தந்து நாட்டின் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றிகாட்டி இருக்கிறார்கள்;. குறிப்பாக மாணவ-மாணவிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்  சத்துணவு திட்டத்தினை கொண்டு வந்து கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தினார்.  வழி வந்த அம்மா  தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில்; கல்விக்காக அதிக நிதி ஒதிக்கீடு செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து நல்லாட்சி புரிந்தார். மேலும், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி, விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், இலவச பேருந்து பயண அட்டை, சீரூடை, காலணிகள், வண்ண பென்சில்கள், சிலேட்டுகள், உலகப்படம், ஜியோமெட்ரிக் பாக்ஸ், கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணனி, விலையில்லா மிதிவண்டி போன்ற 14 வகையான உதவிகளை மாணவர்களுக்கு இந்த அரசு அளித்து வருகின்றது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜந்து ஆண்டுகளில் 78705 மிதிவண்டிகள் மேல்நிலை வகுப்பில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 36,313 மாணவர்களும், 41,392 மாணவிகளும் பயன் பெற்றுள்ளனர். 2016 - 2017ம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 83 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 136 பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 18,604 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. எந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்தாலும் அவற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சையா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் பா.செந்தூர்கனி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சௌந்திரநாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், பள்ளி தாளாளர் சகோதிரி.டெல்மா தலைமையாசிரியை சகோதிரி.ஜாக்குளின் மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்