முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னிமலை வாலிபரை கரம் பிடித்த தைவான் நாட்டு பெண்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே தொட்டம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி கமலம். இவர்களுடைய மகன்கள் கோபாலகிருஷ்ணன் (வயது 29), ஜெகதீஷ் (25). குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். ஜெகதீஷ் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 வரை படித்தார்.பின்னர் ஈரோடு அருகே உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜியும், வேலூரில் உள்ள வி..டி. பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜியும் படித்து முடித்தார். இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் என்ஜினீயரிங் துறையில் ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்புக்காக கடந்த 2010–ம் ஆண்டு தைவான் நாட்டுக்கு சென்றார்.

பெற்றோரும் சம்மதம்

அவர் படித்த அதே கல்லூரியில் அந்த நாட்டை சேர்ந்த யுவன் சின் சென் என்பவரும் ஆராய்ச்சி படிப்பு படித்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எனினும் 2 பேரும் முதலில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது என முடிவு எடுத்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் தங்களுடைய ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தினர். எனினும் 6 ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தென்கொரியா நாட்டில் கோபாலகிருஷ்ணன் பேராசிரியராகவும், தைவான் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் யுவன் சின் சென் முதன்மை நிர்வாகியாகவும் வேலை பார்க்க தொடங்கினர். இந்து முறைப்படி

வெவ்வேறு நாட்டில் இருந்தாலும் செல்போன் மூலம் தங்களுடைய காதலை தொடர்ந்து வளர்த்து கொண்டனர். அதுமட்டுமின்றி தென்கொரியாவும், தைவானும் அருகருகே உள்ள நாடுகள் என்பதால் விமானத்தில் சென்றும் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டனர். கோபாலகிருஷ்ணனுக்காக யுவன் சின் சென் தன்னுடைய பெயரை சினேகா என மாற்றிக்கொண்டார்இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதற்காக பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து கோபாலகிருஷ்ணனும், தமிழ் மணப்பெண் போல் பட்டு சேலை, பட்டு ஜாக்கெட் அணிந்து சினேகாவும் (யுவன் சின் சென்) திருமண பந்தலுக்கு வந்தனர்.இதைத்தொடர்ந்து இந்து முறைப்படி சினேகாவின் கழுத்தில் கோபாலகிருஷ்ணன் தாலி கட்டினார். அப்போது மணமக்களுக்கு உறவினர்கள் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர்.(

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்