முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 முஸ்லிம் நாடுகளுக்கான விசா தடையை டிரம்ப் நீக்க வேண்டும் : ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - அமெரிக்காவுக்குள் 7 முஸ்லிம் நாட்டவர் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

நீக்க வேண்டும்
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- ‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை விதித்து இருப்பது தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது. அது கோபத்தையும், கவலையையும் அதிகரிக்க செய்யும். அதற்கான தடையை நீக்க வேண்டும். அது எனது கருத்து. மேலும் டிரம்பின் இத்தகைய நடவடிக்கை சரியான வழியில்லை. இது விரைவில் நீக்கப்பட வேண்டும்.

தடுக்க முடியாது
7 நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் நுழையாமல் தடுப்பதன் மூலம் மட்டும் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதிகள் பாஸ்போர்ட் மூலம் நபர்களை அனுப்ப மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்