எஸ்.எம். கிருஷ்ணா பா.ஜ.வில் சேருகிறார்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      அரசியல்
SM Krishna(N)

பெங்களூர்  - காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா பாரதிய ஜனதாவில் இணைகிறார். கர்நாடகத்தை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடகத்தின் காங்கிரஸ் முதல்வராக இருந்தார். பின்னர் மத்தியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராகவும் பணியாற்றினார். இந்தநிலையில் அவர் காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.

பா.ஜ.வில்
எஸ்.எம். கிருஷ்ணா திடீரென்று பாரதிய ஜனதாவில் இணைய முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில பாரதிய ஜனதா தலைவரும் முன்னாள்  முதல்வருமான எடியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா பாரதிய ஜனதாவில் இணைகிறார் என்று அறிவித்தார்.

குற்றச்சாட்டு:
எடியூரப்பா கூறியதை உறுதி செய்யும் வகையில் எஸ்.எம். கிருஷ்ணாவும் காங்கிரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். தமக்கு வயதாகிவிட்டதால் காங்கிரசில் இருந்து என்னை ஓரம் கட்டுகிறார்கள். மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் அந்த கட்சிக்கு பிடிக்காது என்றும் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: