முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      இந்தியா
Jail

சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத அமைப்பினர் ஆகியோருக்கு இந்தியாவின் பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து வருவதாகவும் பஞ்சாப் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். காஷ்மீரில் வசித்து வந்த அவனுடைய தந்தை ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டதும், அவர் கொல்லப்பட்டதாக நினைத்து அவன் மனஉளைச்சலில் இருப்பதும் தெரிய வந்தது. சமூக வலைத்தளங்கள் மூலம் ஓராண்டாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளான்.

அவனது செல்போனை போன்றே ஒன்றை ‘குளோனிங்’ மூலம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை சிறுவன் தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது, அவர்கள் ‘குளோனிங்’ மூலம் அங்கிருந்து பெற்றுக்கொண்டுள்ளனர் என்று பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து