முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      உலகம்
Trump

நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டிய அவர், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஜன. 3 ஆம் தேதி காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தியது.

இந்த விவகாரம் உலகளாவிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார். இதுதொடர்பாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், “நான் யாருக்காகவும் பயப்படவில்லை. நீ விரும்பினால் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன். படையெடுப்புகளையோ, படுகொலைகளையோ, ஏவுகணைத் தாக்குதல்களையோ நான் ஏற்கவில்லை.

நான் உளவுத்துறையை ஏற்றுக்கொள்கிறேன். உளவுத்துறையுடன் வாருங்கள். நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம். அரசியல் மாஃபியாக்களால் கொலம்பிய மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள். கொலம்பியர்கள் 7 லட்சம் பேருக்கு அவர்கள் மரண தண்டனை அளித்துள்ளனர். நான் மீண்டும் ஒரு ஆயுதத்தைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆனால், தாய்நாட்டிற்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயாரக இருக்கிறேன்” என சவால் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து